
திரு. அ. பாலமுருகன்
சுயேச்சை வேட்பாளர் · 23.04.2026
117 – கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதி சுயேச்சை வேட்பாளர் · 2026
தேர்தல் வாக்குறுதிகள் நமது 117 கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியின் சுயேசியே வேட்பாளர் அ.பாலமுருகன் அவர்களின் மக்கள் நலனுக்கேற்ப — அனைத்து தெருக்களிலும் வீடுகளில் அமைந்துள்ள சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்து, அந்த வீதிகளில் உள்ள குறைகளை அனைத்தும் கேட்டுறிந்து நமது கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து சங்கங்களின் பெறுகின்ற குறைகளை உடனடியாக எனது மக்கள் மேடை முடித்து வீட்டிற்கு சென்றால் நிம்மதியாக வாழ்வதற்கு அவர்களுக்கு மிகவும் முக்கியமான பிரச்சினையாக இருக்கின்றது விஷயங்களை கண்டறிந்து உடனடியாக நிறைவேற்றி தரப்படும்.
தேர்தல் வாக்குறுதிகள் நமது 117 கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியின் சுயேசியே வேட்பாளர் அ.பாலமுருகன் அவர்களின் மக்கள் நலனுக்கேற்ப தேர்தல் வாக்குறுதிகள் 1 அனைத்து தெருக்களிலும் வீடுகள் அமைந்துள்ள சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்து அந்த வீதிகளில் உள்ள குறைகளை அனைத்தும் கேட்டுறிந்து நமது கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து சங்கங்களின் பெறுகின்ற குறைகளை உடனடியாக எனது மக்கள் மேடை முடித்து வீட்டிற்கு சென்றால் நிம்மதியாக நிம்மதியான சூழலில் வாழ்வதற்கு அவர்களுக்கு மிகவும் முக்கியமான பிரச்சினையாக இருக்கின்றது விஷயங்களை கண்டறிந்து உடனடியாக நிறைவேற்றி தரப்படும்.
மற்றும் பார்க்கவும் அமைப்பதற்கான இட வசதி இருந்தும் அதைத் தராமல் இருக்கும் பட்சத்தில் உடனடியாகப் பார்க்க வைத்து அதில் குழந்தைகள் விளையாடுவதற்கு உண்டான பொருட்கள் அனைவரின் மன அழுத்தத்தையும் குறைக்கும் வகையில் சந்தோசமாக வாழ வழிவகை செய்து தரப்படும் மற்றும் குறைந்தது 500 மரங்கள் நட்டு தரப்படும் அதற்குத் தேவையான சொட்டு நீர் பாசனமும் செய்து தரப்படும்.
எனது தொகுதிக்குட்பட்ட கணவனை இழந்து வாழும் சகோதரிகளுக்கு மாதம் 30 கிலோ தரமான அரிசி ஒரு கிலோ 65 விகிதம் உள்ள 30 கிலோ அரிசி அவர்கள் இல்லத்திற்கு இது எனது பார்வையில் மிகவும் கஷ்டப்படும் கணவன் இல்லாதவர்கள் விவாகரத்து ஆன பெண்கள் கணவனை இழந்தவர்கள் இதைப் போன்று உள்ள சகோதரிகளை நான் நேரில் கண்டிருக்கிறேன்.
அவர்கள் படும் துன்பத்தையும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது அதன் காரணமாகவே இவர்களுக்கு கண்டிப்பாக இதை செய்ய வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
எனது தொகுதியில் மிகவும் கஷ்டத்தில் இருக்கும் பெண்களுக்கு கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் எல்லைக்குட்பட்டு 12 இடங்கள் பேக்டரி அமைக்கப்பட்டது குறைந்தபட்ச சம்பளமாக ஒரு நாளைக்கு 500 ரூபாய் என்கின்ற விதத்தில் மூன்று வேளை உணவுடன் பெண்கள் தங்களது குழந்தைகளாக இருக்கும் பட்சத்தில் அவர்களும் அனைவருக்கும் கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட இடங்களை தேர்வு செய்து உணவு அருந்திக் கொள்ளாம் சட்டமன்ற உறுப்பினரின் நேரடி பார்வையிலேயே தகுந்த வேலை தரப்படும்.
நீண்ட தூரம் பயணம் செய்து பெண்கள் செய்ய வேண்டியுள்ளது அவர்களின் இந்த மன அழுத்தத்தை தடுக்கும் வகையில் நிம்மதியாக வாழ வேண்டும் என்கின்ற நல்ல நோக்கத்துடன் இது ஆரம்பிக்கப்படும் இதன் முழு விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
எனது தொகுதிக்குட்பட்ட அனைத்து குடும்பங்களும் எதற்காக இவ்வளவு கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள் அவர்களின் பிரச்சினைகள் என்னவென்று நான் பார்த்ததில் முதலாவது உள்ளது தனது குழந்தைகளின் படிப்பு மற்றும் அவர்களது செலவுகள் அதற்காக மட்டுமே எனது மக்கள் இரவு பகல் பாராமல் உழைத்துக் கொண்டிருந்தனர்.
குடும்பத்திற்காக தனது உயிரும் சிந்தி குழந்தைகளையும் படிக்க வைப்பதற்கு அவர்கள் எடுத்துக் கொள்ளும் சுய வேதனை அதிகம் ஆனால் அது வெளியில் தெரிவதில்லை நான் அதை உணர்ந்திருக்கிறேன் எனது தொகுதிக்கு உட்பட்ட அனைத்து குடும்பத்திலும் உள்ள ஜாதி மத வேறுபாடு இன்றி உள்ளது குடும்பத்தில் உள்ள குழந்தைகள் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை தனியார் பள்ளிகளில் படிக்கும் அனைத்து குழந்தைகளின் தனியார் பள்ளிக்கு செலுத்தக்கூடியது கட்டணத்தில் 50 சதவீதத்தை எனது தொகுதிக்குட்பட்டு அனைத்து குடும்பங்களில் உள்ள குழந்தைகளுக்கு நானே கட்டுவேன்.
வாக்குறுதி நாம் தினமும் நம்முடன் இணைபிரியாமல் வைத்திருக்கும் இணைய சேவைகளை சரியாக நாம் புரிந்து கொள்வதில்லை என்பது நமக்கு தரக்கூடியது பேக்கேஜ்களில் இவர்கள் கூறும் நெட்வொர்க் இணைய சேவைகள் துள்ளிதமாக கிடைப்பதில்லை இதன்படி கிடைக்காத இணைய சேவை என்றெல்லாம் நமக்கு கிடைக்கவில்லையோ அன்றைய தினத்தை கணக்கெடுத்து அந்த மாதத்தில் வரக்கூடிய அடுத்த நாட்களில் இணைத்து தர வேண்டும் என்கின்ற ஒரு கட்டாய அறிவிப்பை அறிவிப்பேன்.
இலவச டேட்டா 30 நாட்கள் என்று கூறுகிறார்கள் ஆனால் அதில் இரண்டு மூன்று நாட்கள் சரியாக கிடைப்பதில்லை நாம் செலுத்துவது 30 நாட்களுக்கும் சேர்த்து இதனால் நிறைய வேலைகள் பாதிக்கப்படுகிறது இதை சரி செய்யும் வகையில் உதாரணத்திற்கு நீங்கள் பத்து நாள் என்கின்ற பேக்கேஜ் எடுத்துக் கொள்ளுங்கள் உள்ளீர்கள் என்றால் அதில் இரண்டு நாள் சரியாக கிடைக்கவில்லை வேண்டும் — இதை அவர்களே கண்காணித்து அதற்கு உண்டான எந்திரங்களை வைத்து கண்காணித்து அவர்களே நமக்கு தரும்படி வழிவகை செய்யப்படும்.
எனது மக்கள் உழைத்து சம்பாதிக்கும் பணத்தை வீணடிக்கும் நெட் ஒர்க் கேள்வி கேட்கப்படும் போது தாங்கள் செலுத்தும் பணத்திற்கு உள்ள பொருள் தங்களுக்கு கிடைக்கும்.
எனது தகுதிக்குட்பட்ட சொந்த வீடு கட்டுவதற்கு அப்ரூவல் வாங்குவதற்கான வழிமுறை மிகவும் சாதாரணமாக்கப்படும் இன்றைய நிலைமையில் அதிக செலவுகள் செய்தால் மட்டுமே அப்ரூவல் கிடைக்கும் இனிமேல் அதற்கு வழிவகை அமைத்து உடனடியாக அதிக கட்டணம் இல்லாமல் அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டும் வேண்டிய கட்டணங்களை மட்டும் செலுத்தி வாங்கும் இதமான வழிமுறைகள் கடுமையாக பின்பற்றப்படும்.
எனது மக்கள் தனக்கென்று ஒரு சொந்த இடத்தை வாங்குவது பல வருடங்களாக அவர்களின் லட்சியமாக இருக்கும் அதை போல் அவர்கள் இடமும் வாங்குவதற்கு தயார் பட்சத்தில் அந்த இடத்தினால் அவர்களுக்கு வரக்கூடிய பிரச்சினைகள் இந்த பிரச்சினைகள் எதுவும் இல்லாமல் உங்களுக்கென்று தருகிறோம் என்பதற்காகத்தான் நாம் அரசாங்கத்தின் முத்திரைத்தாள் கட்டணம் செலுத்தி இடத்தை சொந்தமாகுகின்றோம்.
ஆனால் அப்படி செய்யும் பொழுது அந்த இடத்தில் பிரச்சினைகள் வருகின்றன இனிமேல் அரசாங்கத்தின் முத்திரையை செலுத்தி இடத்தை பதிவு செய்துவிட்டால் அந்தனுடைய முழு உத்தரவாதமும் அரசை சார்ந்தது என்கின்ற நிலையை கண்டிப்பாக கொண்டு வருவேன்.
நமது தொகுதியில் உள்ள சிறு குறு தொழில் செய்பவர்கள் படும் துன்பங்களும் கஷ்டங்களும் எனது மேற்பார்வையில் நான் பார்த்திருக்கிறேன் அவர்களுக்கான முக்கியமான விதிகளை வகுக்க வேண்டும் இல்லையென்றால் சிறுகுறி தொழிலாளிகள் முற்றிலும் அழிந்து விடுவார்கள் குறிப்பாக அவர்களுக்கு கிடைக்க கூடிய வருமானம் போதிய அளவில் இல்லை 100 ரூபாய் வரவு என்றால் 120 ரூபாய் செலவாகிறது.
கட்டுப்பாடுகளை விதித்தால் மட்டுமே இது சீரான நிலைக்கு செல்லும் முக்கிய பிரச்சினையாக வங்கிகள் தான் உள்ளது சிறுகுறி தொழில் செய்பவர்களுக்கு தேவையான வங்கி நிதி உதவி சரியான நேரத்தில் கிடைக்கப்பெறுவதில்லை காரணம் சிவில் என்கின்ற ஒரு பிரச்சனை உள்ளது பொதுவாக வங்கிகளில் ஒருவருக்கு கடன் வழங்கும் பொழுது ஜமீன்தார் என்கின்ற ஒருவரை சேர்க்கிறார்கள் கடன் வாங்குபவர் சரியாக செலுத்துவில்லை என்கின்ற காரணத்தினால் ஜமீன்தார் சிவில் என்கின்ற பிரச்சினையில் சேர்க்கப்படுகிறார்.
இதனால் நன்றாக தொழில் செய்து அந்த நிறுவனத்தின் உரிமையாளர்களுக்கு சிவில் என்கின்றார் பிரச்சனை வந்து விடுகிறது அதனால் அவர்களின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது அவர்கள் கூறும் போது அவர்களுக்கு உண்டான நிதி உதவியை வங்கி தரப்பில் இருந்து வருகிறது செய்ய மறுக்கிறார்கள் இதன் அடிப்படையிலேயே அதிகமான நிறுவனங்கள் மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கின்றது இதற்கு ஒரு தீர்வு காணும் வகையில் வங்கிகளிடம் இதற்கு ஒரு முக்கிய தீர்வைக் காண்பேன்.
எனது மக்களின் முக்கியமான பிரச்சனை தலைகவசம் அணிந்து வெளியில் செல்வது தற்போதைய சூழ்நிலையில் தலைகவசம் அணிவதற்கு அதிகப்படியான மக்கள் விரும்புவதில்லை என்றாலும் அரசாங்கத்தின் கட்டாயத்திற்காக அணிய வேண்டிய சூழ்நிலை உள்ளது.
தலைகவசம் அணிவதால் முடி உதிர்தல் தலையில் கொப்பளங்கள் ஒரு சில தோல் நோய்கள் வருகின்றன இது தவிர கட்டாய தலைகவசம் என்கின்ற காரணத்தினால் நமது தொழிலாளிகள் வேலைக்கு சென்று வரும் பொழுது தலைகவசம் இல்லாமல் வருகின்ற நபர்களிடம் அபராதம் வசூலிக்கிறார்கள் அவர்களுக்கு கிடைக்கின்ற ஒரு நாள் ஊதியத்தில் தலை கவச்த்தின் அபராதத்தை செலுத்தும் பிரச்சினையானது மிகவும் பெரிய பிரச்சினையாக உள்ளது.
எனது தொகுதியில் தள்ளுவண்டி கடை நடத்தும் காய் பழங்கள் உணவுகள் மிதியடிகள் கைவினைப் பொருட்கள் துணிக்கடைகள் இதைப் போன்ற ஏராளமான சகோதர சகோதரிகள் தள்ளு வண்டியில் வைத்து வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்கள் அவர்களுக்கு நிரந்தரமான ஒரு இடம் அமைத்து நிரந்தர வருமானம் வரும்படி என்னென்ன தேவைகளோ அதை சட்டமாக கொண்டு வந்து அவர்களை நிறைவேற்றி தரப்படும்.
போது இதை போல் தள்ளாவண்டி அமைத்து தொழில் செய்து வருபவர்கள் அவர்களுக்கு என்ன லாபம் வருகிறது என்பதை கூட அவர்கள் அறிவதில்லை நாம் செய்யும் செலவு வரும் வரவு என்னவென்று அவர்கள் கணக்கிடுவதில்லை அதனால் அவர்களின் வாழ்க்கை தரம் இன்று மட்டுமல்ல இன்னும் 50 ஆண்டுகள் ஆனாலும் உயரப்போவதில்லை.
அதை அவர்களுக்கு புரிய வைத்து அவர்களை அடுத்து நிலைக்கு கொண்டு செல்வதற்கு உண்டான அனைத்து நடவடிக்கைகளும் அவர்களுக்கு உண்டான ஆலோசனைகளும் ஒரு குழு அமைத்து கண்டிப்பாக அவர்களுக்கு வழங்கப்படும் இது செய்வது எனதுடைய முக்கிய கடமையாகும்.
நமது தொகுதிக்குட்பட்ட தார் சாலைகள் மற்றும் கழிவுநீர் சாக்கடை அமைப்பு இவற்றில் நடைபெறும் வேலைகளின் தரம் எனது நேரடி பார்வையாக நான் பார்த்திருக்கிறேன் அப்போது அரசாங்கத்தால் அமைக்கப்பெறுகின்ற விதிமுறையின் படி தரமான சாலை அமைப்பதற்கு கொடுத்துள்ள விதிகள் எதையும் பின்பற்றாமல் முற்றிலும் லாப நோக்கத்துடன் வேலைகள் நடைபெறுகின்றன.
இதை அரசு ஊழியர்கள் கவனமாக கண்காணிப்பது குறைவு நான் பதவியேற்ற பிறகு தொகுதிக்குட்பட்டு செய்யக்கூடிய அனைத்து விதமான ரோடுகள் மற்றும் கட்டுமான பணிகள் அனைத்தும் மிகவும் தரமாக நமது அரசாங்கத்தின் மூலமாக என்ன தரம் கூறியுள்ளோமா அந்தத் தரத்தின் படி வேலை வாங்குவது முக்கியமான நோக்கமாகும் அந்த ஒப்பந்தம் உடனடியாக நீக்கப்பட்டு அதற்கு உண்டான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
நமது வாழ்வில் பிரிக்க முடியாத ஒரு அங்கமாக மின்சாரம் அமைந்திருக்கின்றது சில நேரங்களில் மின்தடை ஏற்படும் போது நாம் அதன் வேதனைகளை அறிவோம் சில நேரங்களில் நமது கஷ்டத்தை வைத்து மின் ஊழியர்கள் அதை பணமாக்க முற்படுகின்றனர்.
அதேபோன்ற மின்சார விஷயங்களில் மக்களுக்கு மறைமுகமாக செலுத்துகின்றனர் பட்சத்தில் அந்த நபர் மின்சார பணியில் இல்லாத வகையில் வழிவகை செய்து விடுவோம் நமது மக்களின் நிறைய சிரமத்திற்காக இதை நான் கூறுவதை விட எனது மக்களே அந்தந்த நேரத்தில் பிரச்சினையை எதிர்கொண்டிருப்பார்கள் அவர்கள் அபராத தொகையும் செலுத்தி இருப்பார்கள் அதனால் இந்த பிரச்சனை அவர்களுக்கு ஈஸியாக புரியும்.
நமது தொகுதிக்குட்பட்ட காவல் நிலையங்களில் பணி புரியும் அனைத்து விதமான பணியாளர்களுக்கும் குறிப்பிட்ட இடங்களில் உணவகம் அனைவருக்கும் இலவச உணவு ஏன் இந்த காவலர்களுக்கு மட்டும் இந்த சலுகை என்று பார்த்தால் எந்த நேரமும் எந்த பிரச்சினையானாலும் முதலில் அவர்களுக்கு சொந்த குடும்ப பிரச்சினை வீட்டுப் பிரச்சினை அனைத்தையும் தவிர்த்து பொதுமக்களின் பிரச்சினைகளை பார்க்க வந்து விடுவார்கள் அவர்களுக்கு மரியாதை கொடுக்கும் வண்ணம் இதை செயல்படுத்துவோம்.
நமது தொகுதிக்குட்பட்ட ஐந்து இடங்களில் பத்திரிகை நண்பர்கள் தங்குவதற்கு ஏற்படியாக விடுதிகள் அமைத்து தரப்படும் நமது நாட்டில் நடைபெறும் அனைத்தும் பிரச்சினைகளையும் நமது கையில் சேர்க்கும் பத்திரிகை நண்பர்களுக்காக செய்யக்கூடிய முக்கிய விஷயமானது சிறிய பத்திரிகை முதல் மிகப்பெரிய பத்திரிகை வரை பணிபுரியும் யார் வேண்டுமானாலும் இலவசமாக வெளியூர்களில் இருந்து வந்து தங்கி செல்லலாம் ஊடகங்களுக்கு நாம் செய்யும் மரியாதை.